உழவர் சந்தைகளில் ரூ.11.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

திருப்பூர்,ஜூன்2: திருப்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் தென்னம்பாளையம் பகுதியில் தெற்கு உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த மே மாதம் தெற்கு உழவர் சந்தைக்கு 2,152 மெட்ரிக் டன் காய்கறிகள் 7011 விவசாயிகளால் கொண்டு வரப்பட்டது இதன் மூலம் ரூ.8.20 கோடிக்கு விற்பனை நடந்தது. அதேபோல் திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு 2,882 விவசாயிகள் மூலம் 750 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் 2.97 கோடிக்கு விற்பனை நடந்தது. இரு உழவர் சந்தைகளிலும் கடந்த மாதம் 11.17 கோடிக்கு விற்பனை நடந்தது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் காய்கறி வரத்து மற்றும் விவசாயிகளின் வருகை அதிகரித்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று அதிகரித்ததன் காரணமாக விற்பனை தொகை அதிகரித்திருப்பதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: