வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை

திருப்பூர், ஜூன் 4: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் கூடுதலாக காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுடன் இணைந்து நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது, தூய்மை பணிகள் மற்றும் மின் விளக்கு வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உடனடியாக தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முறையாக சேவைகள் வழங்குவதை கண்காணித்து உறுதி படுத்திடவும், வார்டு கண்காணிப்பாளர்கள் என்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதிதாக வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பணியிடம் தோற்றுவிக்கப்படவில்லை. கவுன்சிலர்களுடன் இணைந்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஏற்கனவே பணிபுரியும் அலுவலர்களை கொண்டு தற்காலிக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories: