பத்திரிகையாளர்களை மிரட்டிய செங்க்ஸ்

கோவை: கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியது அவருடைய ஜனநாயக உரிமை. வேதனையால் அவர் பாஜவிலிருந்து விலகி வந்திருக்கிறார். என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றார்.  முன்னதாக அண்ணாமலை துவங்கிய இயக்கம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சட்டென டென்சன் ஆன செங்கோட்டையன், அதெல்லாம் வேண்டாம்னு, சொல்லிட்டேனே, இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது, இரு, இரு என மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசினார். சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்த கேள்விக்கு, உங்கள் வீட்டில் என்ன பிரச்னை, குழந்தைகள் நல்லாதானே இருக்காங்க என்றார். தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் மிரட்டுகிறீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், இந்த மாதிரியெல்லாம் கேட்க கூடாது. கிட்ட வாங்க, நான் யாரையும் மிரட்டவில்லை என்றார்.

Related Stories: