கோவை சிறையில் காவலரை சரமாரியாக தாக்கிய கைதிகள்

கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டைனை கைதி அரியலூர் ஜெயமணி (31), திருவாரூர் ஆனந்த் (28) ஆகிய இருவரும் வழக்கறிஞரை சந்திப்பதற்காக வந்து மெயின் கேட்டை வழிமறித்து காத்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வெள்ளைப்பாண்டி, ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த கைதிகள் இருவரும் காவலர் வெள்ளைப்பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்கி-டாக்கியை பறித்து தாக்கினர். இதில் அவரது இடது நெற்றி, தலை மற்றும் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. புகாரின்படி ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயமணிகுமார், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: