காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்., தொண்டர்கள் வாக்குவாதம்: துரோகி என கோஷமிட்டதால் பரபரப்பு

சென்னை: காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது திமுக- காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளுவால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காயிதே மில்லத் 131வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்திவிட்டு சென்றார். அதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த வருவதாக இருந்தது.

இதனால் அவரது வருகையை எதிர் நோக்கி திமுகவினர் கூடி நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஜமால் யூனுஸ் எம்எல்ஏ, ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், சிறுபான்மை பிரிவு அபுமூசா உள்ளிட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் வருவதற்குள்ளான இடைபட்ட நேரத்தில் மரியாதை செலுத்திவிட்டு சென்று விடலாம் என முயன்றதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பிறகே செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்த வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியை துரோகி என்று கூறி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் அங்கிருந்த பந்தலில் சற்று ஒதுக்கினர். இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்த காங்கிரசார் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் காயிதே மில்லத் நினைவிடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

* சங்கடம் இருக்கத்தானே செய்யும் செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காயிதே மில்லத்தின் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும் இடத்தில் ஏற்பட்டது வெறும் குழப்பமே. நட்பு ரீதியாக இணைந்து செயல்படும்போது சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. திடீரென்று விட்டு விட்டு போய்விட்டார்கள் என்ற அந்த வருத்தங்களும், சங்கடங்களும் எல்லோருக்கும் இருக்கத்தானே செய்யும். அது செட்டில் ஆக வேண்டும். இதை கூர்மைப்படுத்த வேண்டாம்.

Related Stories: