கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மர்மநபர் தப்பி ஓடினார். காட்டேரி பகுதியைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி, மாடு மேய்த்துவிட்டு வயலில் உறங்கியபோது மர்மநபர் கொடூரம்; வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியை வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்து, காயப்படுத்திவிட்டு சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
