மினி பஸ்கள் நிறுத்தம் பகுதியில் மேற்கூரை அமைக்க கோரிக்கை

ஊட்டி,மார்ச்6: ஊட்டியிலிருந்து நாஞ்சநாடு, கேர்ன் ஹில், மஞ்சனகொரை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. சாலைகளில் வெகுநேரம் பஸ்சுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் சாலைகளில் வெகு நேரம் காத்து நிற்கின்ற நிலை உள்ளது. இவர்கள் அமர்வதற்கு அல்லது மழைக்காலங்களில் ஒதுக்கி நிற்பதற்கு கூட இடமில்லை. எனவே இப்பகுதியில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் மேற்கூரை அமைத்து பயணிகளுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதே போன்று காந்தல் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் ஊட்டி டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>