தேர்தல் விதிமுறைகளை மீறி ஊட்டியில் பாஜக., கொடிகள் மற்றும் தட்டிகள் வைப்பு

ஊட்டி,மார்ச்6: வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் முதல் பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிகள், பேனர்கள் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பேனர்கள், தட்டிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று ஊட்டிக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பிரசாரம் மேற்கொள்வதற்காக வந்திருந்தார். இதனை முன்னிட்டு ஊட்டி நகரின் அனைத்து பகுதிகளிலும் பாஜக கொடிகளையும், தட்டிகளையும் வைத்திருந்தனர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பல இடங்களில் கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை அகற்ற அல்லது வழக்கு போடவும் தேர்தல் அதிகாரிகள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: