சென்செக்ஸ் 1150 புள்ளிகள் மேல் வீழ்ச்சி : பதற்றத்தில் முதலீட்டாளர்கள்

மும்பை: சென்செக்ஸ் 1150 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அமெரிக்க அதிகாரி பரிந்துரையால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1157 புள்ளிகள் சரிந்து 73,493 புள்ளிகளில் வர்த்தகமகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332 புள்ளிகள் வீழ்ந்து 23151 புள்ளிகளில் வர்த்தகமகின்றது. மும்பை சந்தையில் வர்த்தகமாகும் 4185 நிறுவன பங்குகளில் 2750 பங்குகள் விலை குறைத்திருக்கின்றனர். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

மும்பை சந்தையில் இந்திய பொருட்கள் மீது மேலும் 12.5 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிகாரி பரிந்துரைத்திருக்கும் சூழலில் இந்த பங்கு சந்தை வீழ்ச்சி தற்போது கண்டிருக்கிறது. ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை முடங்கும் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் சந்தை சரிவுக்கு காரணமாக அமைத்திருக்கிறது.

Related Stories: