கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை.! சோஷியல் மீடியா தகவல்களை நம்ப வேண்டாம் – RBI விளக்கம்

மும்பை: சமீபத்தில் ரூ.1 லட்சம் கோடி (சுமார் 12 பில்லியன் டாலர்) மதிப்பிலான தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி விற்றுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்த தகவலை ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய நிதி அமைச்சகம் ஆகியவை திட்டவட்டமாக மறுத்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காந்த அளவு வீழ்ச்சி அடைந்தது மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதி செலவினங்களுக்கு மத்தியில் நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பை தக்க வைக்கும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக தகவல் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதாக பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தங்களிடம் 880.52 டன் தங்கம் இருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. எனவே சோஷியல் மீடியாக்களில் வெளியாகும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம், தாங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வத் தகவல்களையே பொதுமக்கள் நம்ப RBI அறிவுறுத்தியுள்ளது.

அதே போல மார்ச் 31, 2025 நிலவரப்படி 879.58 டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்க இருப்பு, இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி 880.52 டன்னாக அதிகரித்துள்ளதை ரிசர்வ் வங்கியின் 2025-26 ஆம் ஆண்டுக்கான சமீபத்திய வருடாந்திர அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Related Stories: