ஒரு வாரத்திற்குள் செலுத்த உத்தரவு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா

மன்னார்குடி, மார்ச் 5: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்பங்குனி பிரமோற்சவ 18 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது . மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் புகழ்பெற்ற வைணவ கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும் மற்றும் விடையாற்றி 12 தினங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் துவக்கமான நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் வரையப் பட்ட கொடிக்கு பூஜை செய்து தீட்சதர்கள் கொடி ஏற்றினர்.. விசேஷ தீபா ராதனைகள் நடத்தப்பட்டது.

முன்னதாக, தங்க கொடிமரத்திற்கு முன்பு பெருமாள் கல்யாண அவசர திருக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று இரவு முதல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய விழாக்கள் வரும் ஏப்ரல் 13ம் தேதி தங்க சூர்ய பிரபையும், 15ம் தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும், வெண்ணைத்தாழி உற்சவம் 19ம் தேதியன்று காலையிலும், மாலை தங்க வெட்டுங்குதிரை உற்சவமும் நடைபெறஉள்ளது. 20ல் தேரோட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர்12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கீதா மற்றும் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

Related Stories: