சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா நகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், அடையாறில் 2 நாள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
