கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது

கோவை, மார்ச்.4:  கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (23). டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் பிரதாப்பை வழிமறித்தார். பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை கழுத்தில் வைத்து சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரூ.500 ஐ பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து பிரதாப் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், பணம் பறித்தது சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

கோவை வேலாண்டிபாளையம் பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (50). இவர் கோவை பி.பி. தெருவில் துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். உக்கடம்- பேரூர் பைபாஸ் ரோட்டில் சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டு மிரட்டினார். அவரிடம் இருந்த ரூ.550ஐ பறித்து கொண்டு தப்பினார். கார்த்திக் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பணம் பறித்த தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த காஜா உசேன்(19) என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>