சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு

குன்னூர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலையொட்டி குன்னூரில் துணை ராணுவ படையினருடன் இணைந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி  நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் 90 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிகள் மட்டுமின்றி பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையிலும் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நேற்று குன்னூரில் துணை ராணுவ படையினருடன் இணைந்து காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். குன்னூர் சிம்ஸ் பார்க் முதல் பெட்போர்டு, அரசு மருத்துவமனை, மவுண்ட் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

Related Stories:

>