மின்துறை அமைச்சர் தொகுதியில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு

திருப்பரங்குன்றம்: மதுரை வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு மதுரை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குள் அமைந்துள்ளது.

இத்தொகுதியின் எம்எல்ஏவாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளார். இந்த குப்பை கிடங்கினை, மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் தவெக மாவட்ட செயலாளர் கல்லாணை, தனது ஆதரவாளர்களுடன் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

அமைச்சர் தொகுதிக்குள் இருக்கும் குப்பைக்கிடங்கில் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு பணிகளை நடத்திய மற்றொரு தொகுதியின் எம்எல்ஏ, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இவரது இந்த நடவடிக்கை தவெகவினர், அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: