பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆத்தூர், மார்ச் 4: ஆத்தூர் தொகுதி எல்லையான அம்மம்பாளையம் பகுதியில்  தேர்தல்  பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லை பகுதியான அம்மம்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் நேற்று வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். அப்போது, அந்த வழியாக சேலம் மாவட்டத்திற்குள் வரும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். போலீசார் மற்றும் வீடியோ கிராபர் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>