வினேஷ் போகத் விவகாரம்: உயர் நீதிமன்றம் கண்டனம்

 

புதுடெல்லி: பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உள்நாட்டில் நடைபெறும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்ததற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யும்படி மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பழிவாங்கும் போக்குடன் நடக்கக்கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.

Related Stories: