கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் கொல்கத்தா அணி வீரர்கள் ஆடியபோது, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 13 ரன்கள் தந்தார். 10வது ஓவரின்போது, கொல்கத்தா வீரர்களை வீழ்த்த முடியாமல் கடும் ஆத்திரத்தில் இருந்த ஹர்திக், ஸ்டம்ப்புகளை கையால் வேகமாக கீழே தள்ளினார். அவரது செயல் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
