இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

 

மலேசியா ஓபன் பேட்மின்டன், ஆடவர் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் அர்ஜுன் ராமச்சந்திரன், ஹரிஹரன் அம்சகருணன் இணை, சீனாவின் ஹு கெயுவான், லின் ஜியாங்யி இணையுடன் மோதியது. இப்போட்டியில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீரர்கள் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர்கள் 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்றனர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சீன இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Related Stories: