மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்; அஸ்மிதா சாலிஹா அட்டகாச வெற்றி: காலிறுதிக்கு முன்னேறினார்

 

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16 போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா, மலேசியாவின் கோ ஜின் வெ உடன் மோதினார். துவக்கம் முதல் இந்திய வீராங்கனை துடிப்புடன் ஆடி ஆதிக்கம் செலுத்தினார்.

அதனால், முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் அஸ்மிதா கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடிய ஆடிய அவர் அந்த செட்டையும் 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: