புதுடெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, ஸ்வீட்டி குஜுர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ககமிகஹரா நகரில், வரும் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்வீட்டி குஜுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்கள வீராங்கனைகளாக ஸ்வீட்டியுடன் சேர்ந்து நவுஷீன் நாஸ், பிரியங்கா மின்ஸ், சந்தீபா குமாரி, நான்சி சரோஹா செயல்படுவர். நடுகள வீராங்கனைகளாக ஸ்ருதி குமாரி, தியா, ஸ்நேகா தாவ்டே, ராஷ்மீன் கவுர், நம்மி கீதா, புஷ்பா மஞ்சியும், கோல்கீப்பர்களாக, மஹாக் பரிஹார், கிலி குமாரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மகளிர் அணி, வரும் 31ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் மலேசியா அணியை எதிர்கொள்கிறது. வரும் 31ம் தேதி கொரியா அணியுடனும், ஜூன் 2ம் தேதி சிங்கப்பூர் அணியுடனும் இந்திய அணி மோதவுள்ளது.
