வாலிபரை குத்துவிளக்கால் குத்தியவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, மார்ச் 3: தேவதானப்பட்டி அருகே வாலிபரை குத்துவிளக்கால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(26). அதே பகுதியை சேர்ந்த பால்துரை என்பவர் முத்துப்பாண்டியை அவதூறாக பேசியுள்ளார். இதை தட்டிக்கேட்ட முத்துப்பாண்டியை பால்துரை வீட்டில் இருந்த குத்துவிளக்கை எடுத்து குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  பலத்த காயங்களுடன் முத்துப்பாண்டி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>