திருத்தங்கல் நகராட்சி வாக்கு சாவடிகளில் வசதிகள் உள்ளனவா? ஆணையாளர் ஆய்வு

சிவகாசி, மார்ச் 3: திருத்தங்கள் நகராட்சி வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் குறித்து ஆணையாளர் பாண்டித்தாய் ஆ்ய்வு மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 2 நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் உள்ளனவா என்று தேர்தல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருத்தங்கல் நகராட்சியில் 15 பள்ளிகளில் உள்ள 70 பூத்களில் ஆணையாளர் பாண்டித்தாய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள் இல்லாத புதிய வாக்குச்சாவடிகளில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஆணையாளர் உத்தரவிட்டார்.

Related Stories: