திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறை காரணமாக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 86,315 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 44,107 பக்தர்கள் தலைமுடி காணிக்ைக செலுத்தினர். கோயில் உண்டியலில் ஒரே நாளில்ரூ.3.94 கோடி காணிக்கை செலுத்தினர்.

நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் ஆக்டோபஸ் கட்டிடம் அருகே உள்ள கோகர்பம் அணை வளைவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி முதல் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related Stories: