புதிய யோசனைகள் தீர்ந்து விட்டன; பிரதமர் மோடி அரசிடம் பொருளாதார அறிவு இல்லை: காங்கிரஸ் விமர்சனம்

 

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் தீவிரமான மறுசீரமைப்பு தேவை என்றும் மோடி அரசிடம் புதிய யோசனைகள் தீர்ந்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பணவீக்கம் குறித்த கணிப்புகள் கடுமையாக உயர்ந்துள்ள அதே வேளையில் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. நேரடி அன்னிய முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது. பொருளாதாரக் கொள்கை வகுப்பில் நமக்கு ஒரு தீவிரமான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. ஆனால் மோடி அரசிடம் வழக்கமான சுய புகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த புதிய யோசனைகளும் எஞ்சியிருக்கவில்லை.

பிரதமர் ஞானேஷ்( தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்) மூலம் தேர்தல்களை நிர்வகித்து வருகிறார். ஆனால் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அவருக்கு புதிய ஞானம் தேவைப்படுகிறது. கொள்கைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், நிர்வாக உத்தரவுகள், வரி அறிவிப்புகள், வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் மற்றும் சோதனைகள் குறித்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது அச்சமும் வணிகம் சார்ந்த நிச்சயமற்ற தன்மையும் நிறைந்த ஒரு சூழல் நிலவி வருகிறது. ” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: