லக்னோ: உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் வௌியிட்ட அறிவிப்பில், “உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலை கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டாயமாக்கப்படுகிறது. மாணவர்களிடையே சமூக வேறுபாடுகளை களைந்து, கல்வி நுழலில் ஒழுங்கை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கம்.
இதேபோல், கல்லூரி, பல்கலை கழகத்தில் பணியாற்றும் எந்தவொரு ஆசிரியரும் பணியின் கண்ணியம் மற்றும் அந்தஸ்தை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபட கூடாது. ஆசிரியர்கள் அனைவரம் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு சென்று மாணவர்களின் சீரான வருகையை உறுதி செய்ய வேண்டும்” என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
