5 நாடுகள் சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

 

புதுடெல்லி: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 5 நாடுகளுக்கு சென்றார். இதன் மூலம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், இந்த பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார். கடந்த 15ம் தேதி பிரதமர் மோடி தனது ஆறு நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்கள், நீண்ட கால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியா முக்கிய ஒப்பங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

இதில் இந்தியாவில் மொத்தம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதாக அபுதாபி உறுதியளித்துள்ளது. நெதர்லாந்து பயணத்தின்போது பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 17 ஒப்பந்தகளில் இந்தியா கையெழுத்திட்டது. ஸ்வீடனும் இந்தியாவும் தங்களது உறவை ஒரு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டன. ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனும், பிரதமர் மோடியும் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய துறைகள்குறித்தும் விவாதித்தனர். இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஒரு சிறப்பு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தினார்.

வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசு
பிரதமர் மோடி தனது பயணத்தின்போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மூகா பட்டு சால்வை, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுக்கு மீன் உருவம் கொண்ட மதுபானி ஓவியம், ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனுக்கு லடாக் தூய கம்பளி சால்வையை பரிசாக வழங்கினார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு கேசர் மாம்பழங்கள், மேகாலாய அன்னாசி பழங்களை வழங்கினார். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு உலர்ந்த ஆர்க்கிட் மலர் ஓவியத்தை பிரதமர் பரிசளித்தார்.

Related Stories: