பால்டா தொகுதியில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் நேற்று மறுவாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரெனப் போட்டியிலிருந்து விலகியதன் பின்னணியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போது 86.71 சதவீதத்தை விட, தற்போதைய வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைவாகவே உள்ளது.

Related Stories: