கேரள கல்லூரி மாணவி பெங்களூருவில் பலாத்காரம்: வயநாடு வாலிபர் மீது வழக்கு

 

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பெங்களூருவில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பதோடு இவர் பெங்களூரு மடிவாளா பகுதியில் தன்னுடைய நண்பர்கள் நடத்தும் ஒரு கஃபேவில் பகுதி நேரமாக வேலை பார்த்தும் வந்தார். இந்த கஃபே தொடங்குவதற்கு வயநாடு சுல்தான்பத்தேரி பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹைனஸ் என்பவர் தான் உதவி செய்துள்ளார். ஆனால் நஷ்டத்தில் இயங்கியதால் சமீபத்தில் இது மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 12ம் தேதி இந்த இளம்பெண் தங்கியிருந்த அறைக்கு வந்த முகம்மது ஹைனஸ் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக இவர் மடிவாளா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அவரை அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையே புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றது குறித்து அறிந்த முகம்மது ஹைனஸ் சில ரவுடிகளுடன் சென்று அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 18ம் தேதி அந்த இளம்பெண் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்தார். இதன் பிறகே முகம்மது ஹைனஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்பட வில்லை.

Related Stories: