அனைத்து மதரசாக்களிலும் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்குவங்க பா.ஜ அரசு உத்தரவு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து மதரசாக்களிலும் காலை நேர பிரார்த்தனையின்போது வந்தே மாதரம் பாடலை பாடுவது உடனடியாக அமலுக்கு வருவதாக பா.ஜ அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் அனைத்து அரசு பள்ளி நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்துடன் வந்தே மாதரம் பாடலையும் கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த வாரம் பாஜ தலைமையிலான மாநில அரசும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி அனைத்து மதரசாக்களிலும நடைபெறும் காலை நேரக் கூட்டுப் பிராத்ததனைகளின்போது கட்டாயம் வந்தே மாதரம் பாடலை பாடுவது உடனடியாக அமலுக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளது.

அரசு மாதிரி மதரசாக்கள், அரசு உதவி பெறும் மதரசாக்கள், அங்கீகரிக்கப்பட்ட சிசு ஷிக்‌ஷா கேந்திரங்கள் மற்றும் மத்தியமிக் ஷிக்‌ஷா கேந்திரங்கள் அத்துடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரசா கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்கள் என அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று மதரசா கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Related Stories: