திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சுவாமியை அலங்காரம் செய்வதற்காக மாதுரி சுப்பாராவ்(81) என்ற பக்தர் கடந்த ஆண்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதிக்கப்பட்ட 461 கிராம் தங்க கீரிடத்தை காணிக்கையாக வழங்கினார். இந்நிலையில் சுப்பாராவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற போது காணிக்கையாக வழங்கப்பட்ட கீரிடம் விற்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.
