பதிவு செய்யப்படாத விதை ரகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை துணை இயக்குனர் எச்சரிக்கை

தஞ்சை, மார்ச் 3: முறையாக பதிவு செய்யப்படாத விதை ரகங்களை தனியார் விற்பனையாளர்கள் இருப்பு வைத்து விற்பனை செய்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா எச்சரித்துள்ளார். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இந்த வகை பயிர்களை பயிரிட வேளாண்துறை மட்டுமின்றி தனியார்துறை விதை உற்பத்தியாளர்களும் விதையை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த விற்பனையை ஒழுங்கு முறைப்படுத்த கோவை விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையில் தனியார் வீரிய ரகங்களை இத்துறையில் பதிவு செய்து எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். முறையாக பதிவு செய்யப்படாத விதை ரகங்களை தனியார் விற்பனையாளர்கள் இருப்பு வைத்து விற்பனை செய்தால் அவர்கள் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா தெரிவித்துள்ளார்.

Related Stories: