அதிகளவில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? பொன்னமராவதி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை

பொன்னமராவதி, மார்ச்3: வாகனங்களில் அதிகளவில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்று பொன்னமராவதி பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பொன்னமராவதி செவலூZ விலக்கு ரோட்டின் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு சார் பதிவாளர் சோமசுந்தரம் தலைமையில் எஸ்எஸ்ஐ கனகராஜ் மற்றும் போலீசார் ரவிச்சந்திரன், மூர்த்தி, ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் கட்சியினர் பூத் கமிட்டியினருக்கு வாகனங்களில் பணம் ஏதும் எடுத்து செல்கின்றனரா, மளிகை சரக்கு என கூறி குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா, கணக்கின்றி பணம் ஏதும் எடுத்து செல்கின்றனரா என்று பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று செவலூர் விலக்கு ரோட்டின் அருகே வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

Related Stories:

>