கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசனை

நாமக்கல், மார்ச் 3: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பேசுகையில், நாமக்கல் பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில், வரும் 8ம் தேதி காலை11 மணிக்கு, உங்கள் தொகுதியில் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை தீர்க்கும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருந்து திமுக, பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் தலைமை கழகத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஸ்டாலின் தான் வராரு,விடியல் தரப்போறாரு என்ற பாடலை ஒளிபரப்பி ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந் நிகழ்ச்சியை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், வாக்குசாவடி ஏஜென்டுகள், சார்வு அணி அமைப்பாளர்கள் வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்றார்.

சட்டமன்ற தேர்தலில், கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி  வேட்பாளர்களை வெற்றி பெறவைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, பொன்னுசாமி, சரஸ்வதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர்செல்வம், மாநில நிர்வாகிகள்  மணிமாறன்,  நக்கீரன், கைலாசம், ராணி, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் செழியன், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் மாயவன், வனிதா செங்கோட்டையன், தொகுதி பொறுப்பாளர்கள் அசோக்குமார், பாலசந்தர், நகர செயலாளர்கள் சங்கர் ராணா ஆனந்த், சிவக்குமார், பூபதி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், பழனிவேல், நவலடி, கௌதம், துரை ராமசாமி, பாலசுப்பரமணியம், துரைசாமி, செந்தில்முருகன், சார்புஅணி அமைப்பாளர்கள் கதிர்வேல், சுகுமார், ஆனந்தன், அறிவழகன், ராணி, சரஸ்வதி, துணை அமைப்பாளர் இளம்பரிதி, நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>