அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா? சென்னை ‘கோச்’ பதில்

 

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் தோனி விளையாடுவார் என்று தகவல் வெளியானது.

இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல் ஆடும் லெவனில் தோனி விளையாடவில்லை. இந்த சீசனில் சென்னையில் நடந்த கடைசி போட்டி என்பதால், போட்டி முடிந்தது அனைவருடன் தோனி புகைப்படம் எடுத்து கொண்டார். மைதானத்தில் வலம் வந்து ரசிர்களை சந்தித்து போட்டோ எடுத்தார். மேலும், அணி வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்ததால், இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்று கேட்டனர். அதற்கு அவர், அது அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்து நிறைய பேச்சுகள் நடந்து வருவது எனக்கு தெரியும். தோனி இந்த ஆண்டு முழுவதும் அணியுடன் இருந்து உள்ளார். அது அணிக்கும், இளம் வீரர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அவர் விளையாடவில்லை என்றாலும், அணியில் அவரது தாக்கம் மிகப்பெரியதாகவே இருந்தது’’ என்றார்.

ரெய்னாவிடம் தோனி சொன்னது என்ன?

சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டி: ஐபிஎல் 2026ல் நீங்கள் விளையாடவில்லை. அது கணக்கில் வராது. அடுத்த ஆண்டு மீண்டும் வர வேண்டும் என்று நான் தோனியிடம் கூறினேன். அதற்கு அவர், என் உடல் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்றார். அதற்கு நான், எதையும் நாங்கள் நம்ப மாட்டோம். அடுத்த ஆண்டும் நீங்கள் விளையாடியே ஆக வேண்டும் என்று சொன்னேன். அது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் அவர் நேர்மறையான மனநிலையில்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்றார்.

Related Stories: