சூப்பர் கிளாஸிக்ஸ் செஸ்: 4வது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா டிரா

 

புகாரெஸ்ட்: சூப்பர் கிளாஸிக்ஸ் செஸ் 4வது சுற்றில், இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா – நெதர்லாந்து வீரர் ஜோர்டென் வான் ஃபாரீஸ்ட் இடையில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது.
ரொமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர் செஸ் கிளாஸிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்ட் உடன் மோதினார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு வீரர்களும் சாதுரியமாக காய்களை நகர்த்தியதால் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி, போட்டி டிரா ஆனது.

இதற்கு முன் நடந்த போட்டிகளில் பிரான்சின் அலிரெஸா பிரோஜ்ஸாவை பிரக்ஞானந்தா வென்றுள்ளார். அவர் ஆடிய மற்ற 3 போட்டிகளும் டிராவில் முடிந்தன. எனவே, 4 போட்டிகள் முடிவில் பிரக்ஞானந்தா, ஜோர்டென், அனிஷ் கிரி ஆகியோர் தலா 2.5 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளனர். அதேசமயம் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், பிரான்சின் வாஷியர் லாக்ரேவை வீழ்த்தியதால், 3 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Related Stories: