சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. 12 போட்டியில் 6ல் வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள சிஎஸ்கே இன்று மற்றும் கடைசிபோட்டியில் வரும் 21ம் தேதி குஜராத்திற்கு எதிராக நல்ல ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு ரன்ரேட் அடிப்படையில் கிடைக்கலாம்.

இதனால் வாழ்வா-சாவா நிலையில் உள்ளது. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன்( 450), கேப்டன் ருதுராஜ் (306) ஓரளவு சிறப்பாக ஆடி உள்ளனர். மிடில் ஆர்டரில் உர்வில் பட்டேல் கார்த்திக் சர்மா கைகொடுத்தாலும் சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், பெரிதாக சாதிக்கவில்லை. பவுலிங்கில் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், நுர் அகமது, முகேஷ்சவுத்ரி எதிரணிக்கு நெருக்கடி அளிப்பர். நடப்பு சீசனில் சேப்பாக்கத்தில் இன்று கடைசிபோட்டியாகும். 44வயதான டோனி இன்று தனது பிரியாவிடை போட்டியாக களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மறுபுறம் சன்ரைசர்ஸ் 12 போட்டியில் 7ல் வென்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யலாம். கிளாசென் (508), அபிஷேக் சர்மா (481), இஷான் கிஷன் (420), டிராவிஸ் ஹெட் (361) அதிரடியில் மிரட்டி வருகின்றனர். பவுலிங்கில் இஷான் மலிங்கா (16விக்கெட்) சாகிப் ஹுசைன் (12), கேப்டன் கம்மின்ஸ் சூப்பராக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Related Stories: