வெம்பக்கோட்டையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

விருதுநகர், மார்ச் 2: இலவச வீட்டுமனை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்ய வந்த வெம்பக்கோட்டை நேருஜி நகர் பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் தங்கள் கோரிக்கை மனுக்களைப் போட்டனர். இதன் பின் அவர்கள் கூறுகையில், வெம்பக்கோட்டை தாலுகாவில் கூலி வேலை செய்து சிரமப்பட்டுகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. அத்துடன் இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளனர்.

அத்துடன் கல்வி உதவித்தொகை, விதவை சான்றிதழ், ரேஷன் கார்டு, தாட்கோ கடனுதவி, உழவர் அடையாள அட்டை, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு, இலவச வீடு போன்ற அரசு வழங்கும் நிவாரணங்கள் எங்கள் பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, முதலில் இலவச வீட்டுனை பட்டா வழங்க வேண்டும் என்று எங்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுள்ளோம் என்றனர்.

Related Stories:

>