செல்போன் வாங்க வர அழைத்து பார்வையற்றோரை அலைக்கழித்த மாற்றுத்திறனாளி ஆபீஸ் அதிகாரிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் அலுவலக அதிகாரிகள் அலட்சிய போக்கால் செல்போன் வாங்க முடியாமல் பார்வையற்றோர் அலைக்கழிப்பிற்குள்ளாகினர். திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் இலவச செல்போன் வழங்குவதற்காக

அடியனூத்து பார்வையற்றோர் காலனியை சேர்ந்தவர்களுக்கு செல்போன்ம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி 15க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் நேற்று செல்போன் வாங்க வந்து இருந்தனர்.

ஆனால் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, அதனால் தேர்தல் முடிந்த பின்புதான் செல்போன் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பார்வையாற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பிரதிநிதி மச்சக்காளை தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முறையிட்டனர்.

பி்ன்னர் மச்சக்காளை கூறுகையில், ‘மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் எங்களது செல்போன் எண்ணிற்கு அழைத்தன் பேரிலே நாங்கள் வந்தோம். ஆனால் தற்போது கேட்டால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் செல்போன் வழங்க முடியாது என்றும், தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு தகவல் கொடுக்கப்படும் என கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பார்வையற்ற நாங்கள் இன்று அலைந்ததே மிச்சம்’ எனக்கூறி புலம்பி சென்றனர்.

Related Stories: