மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 2: ஒட்டன்சத்திரத்தில் மேற்கு மாவட்ட செயலாளர், எம்எல்ஏ அர.சக்கரபாணி ஆலோசனையில் பேரில் நகர திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்ட அவை தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ராசாமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சனா, நகர பொருளாளர் அப்பாச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*கொடைக்கானலில நகர திமுக சார்பில் நடந்த விழாவிற்கு நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமை வகிக்க, நகர அவை தலைவர் மரிய ஜெயந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேல்மலையில் ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

*குஜிலியம்பாறை ஒன்றிய,  பாளையம் பேரூர் திமுக சார்பில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகிக்க, பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், தாமரைக்கண்ணன், மணிமாறன், ராஜ்குமார், செல்வநாராயணன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: