₹10,000 மதிப்பிலான பொருட்களுக்கு ரசீது ₹50,000 ரொக்கம் கொண்டு சென்றால் ஆவணம் கட்டாயம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர், மார்ச் 1: ₹50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் ஆவணம் கட்டாயம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. வாகனங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க, தேர்தல் செலவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ₹50,000த்திற்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் கொண்டு செல்ல வேண்டும். ₹10,000த்திற்கு மேல் பொருட்கள் கொண்டு சென்றால் ரசீது கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். மீறினால் தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>