நெல்லை, தென்காசியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

நெல்லை, மார்ச் 2: நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.   தென்காசி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை தென்காசியில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  தென்காசி சுவாமி சன்னதியில் நகரச் செயலாளர் சாதிர்  ஆலோசனையின்படி நடந்த இவ்விழாவுக்கு நகர அவைத்தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் வேலுச்சாமி, மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, வக்கீல்  அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரகுமான் சாதத்,  கண்ணன், முருகன், விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலாமணி, விவசாய அணி  மாவட்ட  துணை அமைப்பாளர் ராஜேந்திரன்,  மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை  மாவட்ட துணை அமைப்பாளர் சங்கரன் வாத்தியார், நகர நிர்வாகிகள் பால்ராஜ், நடராஜன், ஷேக்பரீத், அப்துல் கனி, கலை பால்துரை முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர்கள் செய்யது ஆபில், நாகூர் மீரான், ஜமாலுதீன் பாபு, அஸ்ரப் அலி, ஜாகிர் உசேன், ஆறுமுகம், சாகுல்ஹமீது, மைதீன் பிச்சை, மஜீத், இஸ்மத், மணிராஜ், நாகப்பன், செய்யது அம்பியா, ராமநாதன், ராமகிருஷ்ணன், முருகன், இசக்கி, ரவி, அமீர், கமருதீன், செய்யது பட்டாணி, சேக்,சண்முகநாதன், முருகேசன், ராமராஜ், தைக்கா முருகன், கோதரி, தேவதாஸ், ஐயப்பன், இசக்கித்துரை, சித்தார்த்தன், அப்துல் கரீம், அபூபக்கர் சித்திக்,இஸ்மாயில், ஹாஜி, ஷேக்,குமார், தகவல் தொழில்நுட்ப அணி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர செயலாளர் சாதிர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தெற்கு மாவட்ட திமுக வக்கீல்  அணியினர் தென்காசியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஸ்டாலின் பிறந்த  நாளை கொண்டாடினர். தென்காசி  குற்றவியல் நீதிமன்றம் முன் நடந்த விழாவில் வக்கீல்  அணி  மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகன், கண்ணன், ராஜா, ரகுமான் சாதத், அய்யாக்காளை, மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், பேச்சிமுத்து, ஷேக்பரீத், ராமராஜ்,  சொக்கலிங்கம், இசக்கி ரவி, நடராஜன், கடையநல்லூர் இஸ்மாயில், முருகன்,  நாகூர்மீரான், சுப்பிரமணியன், தொண்டர் அணி  நகர அமைப்பாளர் கோபால் ராம்,  தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தென்காசி  ஒன்றியம், குற்றாலத்தில் பேரூர் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அண்ணா சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து மக்களுக்கு  இனிப்பு வழங்கினர். விழாவுக்குத் தலைமை வகித்த தென்காசி கிழக்கு ஒன்றியச்  செயலாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  பேரூர் செயலாளர் மந்திரம், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், விவசாய  அணி மாவட்ட துணை அமைப்பாளர் குற்றாலம் குட்டி, கண்ணன், சுரேஷ், காசி கிருஷ்ணன்,  ரவி, சண்முகநாதன், பழனி, சதீஷ் கணேஷ், கரூன், கருப்பையா, சண்முகம், வனராஜ்,  பண்டார சிவன், சோமு, சுந்தர்ராஜ், லட்சுமணன், காளிராஜ்உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

சுரண்டை:  தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கழுநீர்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணபேரியில் நடந்தது. தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் கைமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் தளபதி முருகேசன், ஊராட்சி செயலாளர் பால்ராஜ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தொண்டரணி அமைப்பாளர் கைமுருகன் மோதிரம் வழங்கினார். மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் பங்கேற்ற தொண்டர் அணியினர் உள்ளிட்டோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க வருகிற தேர்தலில் தீவிரமாக களப்பணி ஆற்றுவது என விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதில் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கொடி கோபாலகிருஷ்ணன்,சத்தியராஜ், மாணவரணி நாகராஜ், தினேஷ், திமுக நிர்வாகிகள் மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, நயினார், முறுக்கு பரமசிவம், பெத்தேல் துரைராஜ், ஜெகன், மகேந்திரன், கிருஷ்ணன், ரவி, சிவபெருமாள், ராமர், மாரிமுத்து, மோகன், சதீஷ்மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.   புளியங்குடி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் துரை அறிவுறுத்தலின் பேரில் புளியங்குடியில் நகர திமுக சார்பில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருணாசலம், மகளிர் அணி  மாவட்ட அமைப்பாளர் உமா மகேஸ்வரி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செண்பக குற்றாலம், தொழிலதிபர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

 இதையொட்டி புளியங்குடி காந்தி  பஜார் பகுதியில் கட்சிக் கொடியேற்றிய நிர்வாகிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா, விவசாய அணி அமைப்பாளர் சேதுராமன், பேராசிரியர் நீலமேகம், முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி, வக்கீல் குகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகிரி: சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.சிவகிரியில் நடந்த விழாவில்  பொதுமக்களுக்கு திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். மேலும் சிவகிரி நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வாசுதேவநல்லூர், ராயகிரி ஆகிய பகுதிகளிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.  நிகழ்ச்சிகளில் மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மாடசாமி, நல்லசிவன், முத்தையா, ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா, பேரூர் செயலாளர்கள் டாக்டர் செண்பக விநாயகம், கே.டி.சி. குருசாமி, சரவணன், வக்கீல் அணி  மாவட்ட அமைப்பாளர் மருதப்பன்,  துணை அமைப்பாளர் பொன்ராஜ், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், வீரமணி,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார்,  விவசாயத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பூமிநாதன்,  மகளிர் அணி மாவட்டத் துணைச்செயலாளர் கிருஷ்ணலீலா, ஒன்றிய பொறுப்பாளர்கள் மாரித்துரை, செல்வராஜ், கட்டபொம்மன்,  ரூபிபாலா, பேரூர் துணைச்செயலாளர் முனியாண்டி, பேராசிரியர் செல்லத்துரை, பேரூர் இளைஞரணி செயலாளர்கள் கந்தவேல், முனீஸ்வரன், ஆர்.ஆர்.கார்த்திக்,முருகன், திருப்பதி, குட்டியப்பன், புல்லட் கணேசன்,ராஜதுரை,துரைப் பாண்டியன்,மற்றும் ஒன்றிய கழக, பேரூர்கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>