நெல்லை சட்டமன்றத்தொகுதியில் 9 இடங்களில் திமுக தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம்

நெல்லை, மே 15: நெல்லை சட்டமன்றத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மேற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த நெல்லை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள், திமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி,

மே 17ம் தேதி மாலை 6 மணிக்கு டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் அருகிலும், இரவு 7.30 மணிக்கு ராமையன்பட்டியிலும், 18ம் தேதி மாலை 6 மணிக்கு மானூர் யூனியன் அலுவலகம் அருகிலும், இரவு 7.30 மணிக்கு தச்சநல்லூர் அண்ணா சிலை அருகிலும், 19ம் தேதி மாலை 6 மணிக்கு பேட்டை மீனாட்சி தியேட்டர் அருகிலும், இரவு 7.30 மணிக்கு சுத்தமல்லி கோபாலசமுத்திரம் சாலையிலும், 20ம் தேதி மாலை 6 மணிக்கு தாழையூத்து 9ம் நம்பர் பஸ் ஸ்டாப் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு சங்கர்நகர் இபி அலுவலகம் அருகிலும், 21ம் தேதி கங்கைகொண்டான் பஜார் திடலிலும் நடக்கிறது.

கூட்டங்கள் மானூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் மாரியப்பன், அன்பழகன், அருள்மணி, பாளை. வேலன்குளம் கண்ணன், தலைமையில் நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பேச்சிபாண்டியன், அவைத்தலைவர் முருகன், சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டிபிஎம் மைதீன்கான், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டங்களில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பிஎல்ஏ 2, பிடிஏ, பிஎல்சி மற்றும் திமுகவினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

Related Stories: