கோவில்பட்டி வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேக்கு, சந்தன மரக்கன்று வழங்க நடவடிக்கை

கோவில்பட்டி, மே 15: கோவில்பட்டி வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி வனக்கோட்டம், கோவில்பட்டி வனச்சரகம் வனத்துறை சார்பாக கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு வழியாக குருமலை செல்லும் பாதையில் ஊத்துப்பட்டியில் அமைந்துள்ள வனத்துறை நர்சரியில் மகாகனி, தேக்கு, ஈட்டி, வேம்பு, செம்மரம், வேங்கை, பலா, புளி, சீதாப்பழம், நெல்லி, கொய்யா, நீர்மருது, ஆவி, பாதாம், கொடிக்காய், சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இவற்றை பெற்று பயன்பெறுமாறு கோவில்பட்டி, எட்டயபுரம், மற்றும் கயத்தார் தாலுகா விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மரக்கன்றுகளை கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்தவர்கள் 96551 50905 என்ற செல்போன் எண்ணிலும், எட்டயபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் 98429 70083 என்ற எண்ணிலும், கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்தவர்கள் 75980 54040 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Related Stories: