தேவதானப்பட்டி, மே 15: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்களம் அய்யனார் மண்டபம் தெருவே சேர்ந்தவர் கூலி தொழிலாளி கணேசன் (50). இவர் கடந்த 9ம் தேதி ஜெயமங்கலத்திலிருந்து மேல்மங்கலம் செல்லும் வழியில் சாலையில் உள்ள பாலத்தில் மீது அமர்ந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார். சிகிச்சையிலிருந்த கணேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
