வள்ளியூர், மே 15: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (16ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம் பெல் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வழிகாட்டுதலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (16ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொறுப்பாளர் கிரகாம் பெல் தலைமையில் நடக்கிறது.
எனவே தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிரகாம்பெல் தெரிவித்துள்ளார்.
