மதுரை, மே 15: மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, எஸ்எஸ் காலனி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ முத்தையா தலைமையில், போலீசார் எல்லீஸ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லீஸ் நகர் ஹாக்கி தைதானத்திற்கு அருகில் உள்ள தெருவில் சந்தேகத்திற்கு இடமாக 5 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் நடத்திய சோதனையில், 2 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் செல்லூரை சேர்ந்த ஆசிக் அகமது (21), எல்லீஸ் நகர் பழைய காலனியை சேர்ந்த சந்தோஷ்குமார் (18), எல்லீஸ் நகர் கலையரசன் (19), மற்றும் இரண்டு சிறார்கள் என்பது தெரியவந்தது. இதையொடுத்து அவர்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
