ராஜபாளையம், மே 15: டீக்கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் செல்வகுமார். வீட்டின் அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் மறைத்து வைத்துவிட்டு கடைக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, ரூ.14 ஆயிரம் பணம் காணவில்லை.
இதுகுறித்து சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சார்பு ஆய்வாளர் ஜோதி ஆகியோர் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் முத்துக்குமார்(34) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பணம், நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்.
