கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி

ஊட்டி, மார்ச் 2:   தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில், கொடி கம்பங்களை அகற்றும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரம் ஈடுபட்டு வருகின்றனர்.   தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து 72 மணி நேரத்திற்குள் அரசியல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், தட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டது. சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பம் அகற்றும் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று ஊட்டியில் பெரும்பாலான பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: