மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே

வேட்டவலம், மார்ச் 1: வேட்டவலம் அடுத்த வெண்ணியந்தல்- கரிப்பூர் கூட்ரோட்டில் சிறப்பு எஸ்ஐ காமராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதையடுத்து போலீசார், டிராக்டரில் இருந்த மற்றோருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் அனுமதியின்றி மொரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டிராக்டரை ஓட்டிவந்த இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி தப்பிச்சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>